ADDED : பிப் 22, 2026 05:50 AM
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் தெப்பத் திருவிழா மார்ச் 1 முதல் 3 வரை நடக்கிறது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பவுர்ணமியில் தெப்பத் திருவிழா நடக்கும். இந்தாண்டு மார்ச் 1ல் தொடங்குகிறது. மார்ச் 2 மாலை 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் கஜேந்திர மோட்ச திருவிழா நடக்கிறது.
பவுர்ணமி தினமான மார்ச் 3ல் தெப்ப விழாவின் போது சந்திர கிரகணம் ஏற்படுவதால் காலை 6:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பொய்கைக்கரைப்பட்டி செல்கிறார். அங்குள்ள தெப்பத்தில் காலை 8:00 முதல் 8:30 மணிக்குள் எழுந்தருளுகிறார். தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடப்பதால் நிலைத் தெப்பமாக நடத்தப்பட்டு மதியம் 12:00 மணிக்குள் கோயிலுக்கு வந்தடைகிறார்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
