ADDED : ஜூலை 25, 2025 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைவர் தர்மராஜ் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. செயலாளர், தாளாளர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்றார்.
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். பள்ளிப் புரவலர் சுவாமிதாஸ், பள்ளி விடுதிக்குழுச் செயலாளர் குமார், மதுரை நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் மணி, காமராஜர் அறநிலையம் துணைத் தலைவர் சோமசுந்தரம் பேசினர்.பட்டிமன்றப் பேச்சாளர் ராஜ்குமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். முதல் மூன்று பள்ளிகளுக்கு வெள்ளிச் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. புனித வளனார் மெட்ரிக் பள்ளி முதல் பரிசு, வி.எம்.ஜே., பள்ளி 2வது பரிசு, எம்.கே.ஆர்., அய்யநாடார் ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கிலப்பள்ளி 3வது பரிசு பெற்றனர். தலைமையாசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.