/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகா பெரியவா 130வது ஜெயந்தி விழா: மதுரையில் திரளான பக்தர்கள் தரிசனம்
/
மகா பெரியவா 130வது ஜெயந்தி விழா: மதுரையில் திரளான பக்தர்கள் தரிசனம்
மகா பெரியவா 130வது ஜெயந்தி விழா: மதுரையில் திரளான பக்தர்கள் தரிசனம்
மகா பெரியவா 130வது ஜெயந்தி விழா: மதுரையில் திரளான பக்தர்கள் தரிசனம்
UPDATED : மே 24, 2024 12:09 PM
ADDED : மே 24, 2024 12:07 PM

மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் மகா பெரியவா 130வது ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் 130வது ஜெயந்தி விழா வை முன்னிட்டு மதுரை எஸ்எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் வைத்து நடைப்பெற்றது.
இந்த விழாவில் மகாபெரியவா விக்ரகத்துக்கு திருமஞ்சனத்திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தன சங்கு நீர் உள்ளிட்ட அபிஷேகம் நடைப் பெற்றது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது.
இதை தொடர்ந்து வேதாச்சாரியார்களின் வேதமந்திரம் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு தொடர்ந்து கலச புனிதநீரால் அபிஷேகம் நடைப்பெற்றது.
பின்னர் விக்ரகத்துக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.