/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காசி, கயா, அயோத்தி ஆக்ரா, ஷீரடி சுற்றுலா
/
காசி, கயா, அயோத்தி ஆக்ரா, ஷீரடி சுற்றுலா
ADDED : ஏப் 20, 2025 04:33 AM
மதுரை : சென்னையிலிருந்து காசி, அயோத்தி, கயா, திருவேணி சங்கமம் சுற்றுலாவிற்கு சீனிவாசா டூர் ஆப்பரேட்டர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
உரிமையாளர் சேஷாத்ரி கூறியதாவது: குறைந்த கட்டணத்தில் வடமாநிலங்களில் 11 நாள் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளோம். சென்னையிலிருந்து ஜூன் 16, ஜூலை 20, ஆக.,17, செப்., 21, நவ.,9 ல் ரயிலில் புறப்பட்டு ஆக்ரா, மதுரா, பிருந்தாவனம், அயோத்தி ராமர் கோயில், அலகாபாத் திருவேணி சங்கமம், நேரு பிறந்த வீடான ஆனந்த பவன், புத்த கயா புத்தர் கோயில், விஷ்ணு பாதம் கோயில், வாரணாசி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோயில், டில்லி அழைத்துச் செல்லப்படுவர்.
ரயில், பஸ், தங்குமிடம், உணவு வசதி அனைத்திற்கும் சேர்த்து ஒருவருக்கு கட்டணம் ரூ.18 ஆயிரம். 12 பேர் ஒரு குழுவாக வந்தால் அதில் ஒருவர் இலவசமாக அனுமதிக்கப்படுவார். 5 நாட்கள் ஷீரடி சுற்றுலா உண்டு. இதில் ஷீரடி, குஸ்நேஸ்வர் ஜோதிர்லிங்கம், எல்லோரா குகை சிற்பங்கள், மினி தாஜ்மகால், பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோயில், சனி சிங்கனாப்பூர் சனீஸ்வரன் கோயில், சித்தேஸ்வர் கோயில், கைகாட்டு மகாராஜா கோயில், மகான் ராகவேந்திரர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதில் நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.8900. ஜூன் 15, ஜூலை 20, ஆக.,17, செப்.,14, அக்.,12, நவ.,9, டிச.,21ல் சுற்றுலா துவங்கும். விபரங்களுக்கு 93848 54561, 93848 54569ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

