/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கத்தரி, வெண்டை விவசாயிகள் மகிழ்ச்சி
/
கத்தரி, வெண்டை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 01, 2024 05:36 AM
பேரையூர்: கத்தரி, வெண்டைக்காய் விலைகள் உயர்ந்துள்ளதால் பேரையூர் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பேரையூர் பகுதியில் கத்தரி, வெண்டை சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. தற்போது மார்க்கெட்டில் இவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் வெண்டைக்காய் கிலோ ரூ.6க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.50க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல் கத்திரிக்காய் கிலோ ரூ.55க்கு கொள்முதல் செய்யப்படுகின்றன.
விவசாயிகள் கூறுகையில், பேரையூர் பகுதியில் நல்ல மழை பெய்ததால் கத்தரி, வெண்டைக்காய் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. மற்ற காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால் கத்தரி, வெண்டையை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்பு தற்போதுதான் லாபத்தை பார்க்கிறோம்'' என்றனர்.