/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரைக்கு வந்தாச்சு '‛கட்கா' விளையாட்டு கருவிகள் தேசிய வீரர்களுக்கு தயாராகிறது ‛மெனு கார்டு'

ADDED : ஜன 20, 2024 05:09 AM

மதுரை: மதுரையில் நாளை (ஜன.,21) தொடங்க உள்ள கேலோ இந்தியா தேசிய அளவிலான கட்கா போட்டிக்கான புதிய உபகரணங்கள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பஞ்சாபின் தற்காப்பு கலையான 'கட்கா' போட்டி வாளும் கேடயம் போன்ற உபகரணங்களுடன் விளையாடக்கூடியது. ஒற்றையர், இரட்டையர் விளையாட்டுகளாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் இந்த விளையாட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது தேசிய அளவில் பங்கேற்கும் எட்டு அணிகளில் தமிழக அணியின் ஆடவர், மகளிர் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஜன.,21 முதல் 23 வரை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள தேசிய போட்டிகளுக்காக, தடகள டிராக்கின் உட்பகுதி கால்பந்து மைதானம் மாற்றப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் உட்பட 8 அணிகள் மதுரை வந்து சேர்ந்த நிலையில், வீரர், வீராங்கனைகள் விளையாடுவதற்கான உபகரணங்களும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சியாளர்கள் பரிசோதனை அடிப்படையில் விளையாடி பார்த்தனர்.
தினமும் வீரர், வீராங்கனைகள், மேலாளர்கள், பயிற்சியாளர்கள் என 540 பேருக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உணவு தயாரிக்கப்பட உள்ளது. டில்லியில் இருந்து பிரத்யேக மெனு அனுப்பப்பட்டுள்ளது. உணவு பரிமாறுவதற்கு அரைமணி நேரம் முன்பாக உணவு பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்றைய உணவு மாதிரி மதுரை காந்தி மியூசியம் அருகிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இன்று (ஜன.,20) முதல் ரேஸ்கோர்ஸ் வளாகத்திலேயே உடனுக்குடன் உணவை பரிசோதனை செய்ய மொபைல் லேப் கொண்டு வரப்படுகிறது.