/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏப்.16ல் 'கேலோ இந்தியா' மாநில தேர்வு
/
ஏப்.16ல் 'கேலோ இந்தியா' மாநில தேர்வு
ADDED : ஏப் 13, 2025 05:36 AM
மதுரை -: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'கேலோ இந்தியா' விளையாட்டுக்கான மாநில அளவிலான தேர்வு ஏப். 16 சென்னையில் நடக்கிறது.
பீகாரில் மே 4 முதல் 15 வரை 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 27 வகை விளையாட்டுகளும் இ - ஸ்போர்ட் விளையாட்டும் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான தேர்வு சென்னையில் ஏப். 16 காலை 7:00 மணிக்கு நடக்கிறது. கூடைபந்து மாணவர்கள், மாணவிகள் பிரிவுக்கான தேர்வு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. மாணவிகள் கால்பந்து, வாலிபால் போட்டி நேரு விளையாட்டு அரங்கிலும் மாணவிகள் கபடி, கோகோ போட்டி நேரு பார்க் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.
மல்லர்கம்பம் இருபாலர் பிரிவு போட்டிக்கான தேர்வு விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் ஏப். 16 காலை 7:00 மணிக்கு நடக்கிறது. 2007 ஜன. 1க்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது. ஆதார் அட்டை, பள்ளிச்சான்றிதழ், பிறப்புச் சான்றிதழுடன் நேரில் செல்ல வேண்டும். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.

