/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வடமலையான் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
/
வடமலையான் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
வடமலையான் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
வடமலையான் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
ADDED : ஜன 11, 2024 04:44 AM

திண்டுக்கல் : ''திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது'' என டாக்டர் ஜாப்ரின் நிஷாந்த் கூறினார்.
பெரிய நகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்துள்ளனர்.
அந்த டாக்டர்கள் குழுவினருக்கு மருத்துவமனை சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர் ஜாப்ரின் நிஷாந்த் பேசியதாவது:
திண்டுக்கல் நாகராஜ் மகன் இளவரசன். 2 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம், பசியின்மை போன்ற பிரச்னைகள் இருந்தன. அவர் யூரேமிக் நோயால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. யூரியா, கிரியாட்டின், ஹீமோகுளோபின் அளவுகளும் குறைவாக இருந்தன.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு தந்தை நாகராஜ் சிறுநீரகம் வழங்க முன்வந்தார்.
கடந்த டிசம்பரில் அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந்தது. இருவரும் கண்காணிப்பில் இருந்தனர். ஒரு மாதத்திற்கு பின் பரிசோதித்தபோது இளவரசனுக்கு யூரியா, கிரியாட்டின், ஹீமோகுளோபின் அளவுகள் சரியான இருந்தன.
சிறுநீரக பிரச்னை முற்றிலும் சரியானது. இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திண்டுக்கல்லில் சிறப்பாக செய்துள்ளோம் என்றார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர் ஹேமநாத், டாக்டர்கள் தேவ் ஆனந்த், நரேந்திரகுமார், மயக்கவியல் டாக்டர்கள், மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சதீஷ் கின்னே, சந்திரமுரளி, முத்துவிஜயன், வேலாயுதம், லோகவிஜயன், சத்திய செல்வம் ஆகியோரை நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி, இணை நிர்வாக இயக்குநர் சந்திரா பாராட்டினர். முதன்மை செயல் அதிகாரி கார்த்திகேயன் நன்றி கூறினார்.