sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அடிப்படை வசதியில்லாத கிழவனேரி கிராமம்

அடிப்படை வசதியில்லாத கிழவனேரி கிராமம்

அடிப்படை வசதியில்லாத கிழவனேரி கிராமம்


ADDED : ஜன 20, 2024 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 05:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் கிழவனேரியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் இடிந்த நிலையில் உள்ளதால் பாம்பு , தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைந்துள்ளன.

அந்த சுகாதார வளாகத்தை பெண்கள், குழந்தைகள் பயன்படுத்த முடியாமல், திறந்தவெளியாக உள்ள கண்மாய் உள்ளிட்ட பகுதிகள், காடுகளுக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள், குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அந்த கட்டடத்திற்கு ரேஷன் பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் செல்வதற்கும் போதிய பாதை வசதி இல்லை. இதனால் ரேஷன் கடையே ஒரு சாவடியில்தான் செயல்பட்டு வருகிறது.

மேலும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகள் இன்றி, நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக கிழவனேரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us