ADDED : ஆக 29, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஒத்தக்கடை தணிகாச்சலம்.
உறவினர்களுடன் திருநெல்வேலியில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தார். ஆக.28ல் நள்ளிரவு போதையில் வந்த இருவர் தணிகாச்சலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கத்தியால் குத்தி அவரை கொலை செய்தனர். குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தணிகாச்சலத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் ஒத்தக்கடை-–மேலுார் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
