/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேக்கிழார்பட்டியில் கூலத்தேவர் தேர்வு
/
மேக்கிழார்பட்டியில் கூலத்தேவர் தேர்வு
ADDED : டிச 20, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலில் அம்மனை தேவர் சமூகத்தினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
இவர்களில் மேக்கிழார்பட்டி கூலத்தேவராக இருந்த பழனியாண்டி இறந்ததை தொடர்ந்து, புதிய தேவர் பட்டத்திற்கு தேர்ந்தெடுக்கும் பணி மேக்கிழார்பட்டி மந்தையில் நடந்தது. சுழற்சி முறைப்படி சதீஷ்குமார் 31, என்பவரை அனைவரும் இணைந்து தேர்வு செய்து பட்டம் கட்டினர். வாழ்நாள் முழுவதும் இவர் இப்பட்டத்தில் இருப்பார்.

