UPDATED : ஆக 11, 2026 05:25 PM
ADDED : ஆக 11, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் நாகம்மாள் கோயில் ஆடித் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மண்கட்டி தெப்பகுளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. 4 அடி முதல் 25 அடி நீளம் அலகு குத்தியும், காளி வேடமிட்டும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று (ஆக. 12) முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. புஷ்பத்தேரில் அம்மன் எழுந்தருளுகிறார். நாளை முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும். டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
