ADDED : ஆக 31, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தென்கரை ருக்மணி சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கான முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.
இங்கு ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு செப்.,4 கிருஷ்ணஜனனம், செப்.5 உறியடி, வழுக்குமரம்ஏறுதல், செப்.,9 திருக்கல்யாணம், செப்.,13 ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவின் தொடக்கமாக நேற்று (ஆக.31) சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. அர்ச்சகர் பாலாஜி தலைமையில் பூஜைகள் நடந்தன. கிருஷ்ணமூர்த்தி, வெங்கடரமணன், வேம்புஐயர், தண்டபாணி, விச்சு, கருப்பத்தேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
