sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அனுப்பானடியில் கூடலழகர் பெருமாள் கனுப்பாரி வேட்டை திருவிழா

/

அனுப்பானடியில் கூடலழகர் பெருமாள் கனுப்பாரி வேட்டை திருவிழா

அனுப்பானடியில் கூடலழகர் பெருமாள் கனுப்பாரி வேட்டை திருவிழா

அனுப்பானடியில் கூடலழகர் பெருமாள் கனுப்பாரி வேட்டை திருவிழா


ADDED : ஜன 05, 2024 04:05 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அனுப்பானடி கனுப்பாரி வேட்டை திருவிழாவில் கூடலழகர் பெருமாள் எழுந்தருளுவது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அனுப்பானடி மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: அனுப்பானடியில் கனுப்பாரி வேட்டை உற்ஸவம் 1887ம் ஆண்டிலிருந்து நடக்கிறது. இதற்காக ஜாதி வேறுபாடின்றி மண்டகப்படி அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கனுப்பாரி வேட்டை திருவிழாவின்போது கூடலழகர் பெருமாள் தை 2 முதல் 4 வரை எழுந்தருளுவது வழக்கம். இதை அக்கோயில் நிர்வாகம் ஏற்கனவே 2 நாட்களாக குறைத்தது.

தற்போது அதை எவ்வித காரணமும் இன்றி ரத்து செய்து 3 மணிநேரம் மட்டுமே அனுப்பானடியில் சுவாமி எழுந்தருள கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. பக்தர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. மாற்றம் செய்ததற்கு தடை விதிக்க வேண்டும். கனுப்பாரி வேட்டை திருவிழாவில் ஜன.,16 முதல் 17 வரை சுவாமி எழுந்தருள நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

கோயில் தரப்பு: கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபி ேஷகம் ஜன.,21 ல் நடக்கிறது. யாகசாலை பூஜை ஜன.,17ல் துவங்குகிறது. ஜன.,16 ல் சுவாமி அனுப்பானடியில் எழுந்தருள பெரும்பாலான மண்டகப்படி உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: அறநிலையத்துறை இணை கமிஷனர், கோயில் உதவி கமிஷனர் ஜன.,6ல் கூட்டம் நடத்தி முடிவெடுக்க வேண்டும். அதன் விபரத்தை ஜன.,8ல் இந்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us