ADDED : செப் 25, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் நகர் இலக்கிய பேரவை சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா லிங்கா மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
பேரவை தலைவர் பூலோக சுந்தர விஜயன் தலைமை வகித்தார். செயலாளர் சங்கரன் வரவேற்றார். குறளும் பொருளும் என்ற தலைப்பில் துணைச் செயலாளர் ஜெயபாலகிருஷ்ணன் பேசினார். அறிவோம் வரலாறு குறித்து பொருளாளர் தமிழ்ச்செல்வன் பேசினார்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் விஜயலட்சுமி, செந்தில்வேல் கவுரவிக்கப்பட்டனர்.
கம்பன் கழக தலைவர் அழகர்நாதன், இறையன்பு நுாலக நிறுவனர் பார்த்தசாரதி, அறிவு அன்பு அறக்கட்டளை நிறுவனர் குரு ஜெயசந்திரன், ஓய்வுபெற்ற நுாலகர் இளங்கோ கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் கண்ணன் நன்றி கூறினார்.