/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இளமனுார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
இளமனுார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 12, 2024 04:48 AM
மதுரை: மதுரை குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 16 தங்கம், 15 வெள்ளி, 27 வெண்கல பதக்கங்கள் வென்றனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் தலைமையாசிரியை கனகலட்சுமி தலைமையில் நடந்தது. உதவி தலைமையாசிரியை தேவி முன்னிலை வகித்தார். ஆசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா, கிழக்கு ஒன்றியத் தலைவர் மணிமேகலை பதக்கம், சான்றிதழ் வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜா, பயிற்சியாளர்கள் விஜய் ஆனந்த், விஜய் சிவா, அறிவழகன், பிரபாகரன், பெமிஷ் எஸ். பெர்லின் பாராட்டப்பட்டனர். ஒன்றிய கவுன்சிலர்கள் திலகர், உமாமகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக கல்வியாளர் பாண்டிய ராஜன் பங்கேற்றனர்.