ADDED : அக் 30, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவில் தடகளப் போட்டிகள் நடந்தன.
டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர் ராஜ்குமார் 19 வயதுக்குட்பட்ட தடை தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். புவனேஷ்சரண் 14 வயதுக்குட்பட்ட போட்டியில் நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்றார். இவர்கள் மாநில போட்டிக்கு தகுதிபெற்றனர். அவர்களை தலைமை ஆசிரியர் சந்திரா, உடற்கல்வி ஆசிரியர்கள் அற்புதராஜ், தேன்மலையாண்டி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

