ADDED : பிப் 02, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி : மகாத்மா காந்தி மற்றும் ஜே.சி குமரப்பா நினைவு தினம் டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்டது.இங்குள்ள காந்திமண்டபத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
குமரப்பா மற்றும் மீனாட்சி அம்மா பற்றிய நினைவுகளை கிருஷ்ணம்மாள் பகிர்ந்து கொண்டார். சென்னை சில்க்ஸ் தலைவர் சந்திரன், அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் நாச்சியார், காந்திகிராம ஊரக சுகாதார நிறுவன இயக்குனர் வனஜா, செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் டாக்டர் சத்யா ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.