நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை : எழுமலை அருகே மேலத்திருமாணிக்கம் கிராமத்தில் பாண்டியர்கள் காலத்துக்கு முற்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், அமச்சியார் அம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம் ஜன., 21ல் நடக்கிறது.
இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், உபயதாரர் ஆச்சிகாசிமாயன், அர்ச்சகர் அசோக் ஆனந்த கிரி சிவம், ஓதுவார் அழகுசொக்கு, பணியாளர்கள், மக்கள் பங்கேற்றனர். ஜன.,19, 20, 21ல் யாகசாலை பூஜைகள், கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த முடிவெடுக்கப்பட்டது.

