தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோயில்களில் கும்பாபிஷேகம்

 கோயில்களில் கும்பாபிஷேகம்

 கோயில்களில் கும்பாபிஷேகம்


ADDED : மார் 07, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி, மேலுார் பகுதி கோயில் களில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயிலில் மூலவர்களுக்கு புதிய விமானம் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேக முதல்கால யாக சாலை பூஜை மார்ச் 4ல் துவங்கியது.

நேற்று காலை யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீர், கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

பின்பு மூலவர்கள் ருக்மாயி பாண்டுரங்க சுவாமி, விநாயகர், ஆண்டாள், துர்க்கை, ஆஞ்சநேயர், முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

வாடிப்பட்டி:: நாகமலை புதுக்கோட்டை: என்.ஜி.ஓ.: அய்யனார் கோயில்: கும்பாபிஷேகம் நடந்தது.: மார்ச் 5ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜை, கோ, லட்சுமி பூஜை, மூல மந்திர ஹோமத்தை தொடர்ந்து கடம் புறப்பாடானது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

விநாயகர், சுப்பிர மணியர், பெரிய கருப்பு, பேச்சியம்மன் ராக்காயி, அக்னி வீரபத்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us