ADDED : பிப் 23, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: குறவன்குளம் கிழக்கு மந்தை ராஜகாளியம்மன் கோயில் வீதியில் மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் துவங்கின. சீமானுாரர் மண்டபத்தில் லட்சுமி ஹோமம், வாசு சாந்தி பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி சக்தி பீடங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். காளியம்மன், மதுரை வீரன், முனிச்சாமி, ஆண்டிச்சாமி, சங்கிலி கருப்பு, சின்ன கருப்பு பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
