ADDED : ஆக 23, 2026 12:44 AM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வகுரணி ஊராட்சி புத்துார் மலைஅடிவாரம் உள்ள மலைராமன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமத்துடன் துவங்கி, யாகசாலை பூஜைகள் நடந்தன. புனிதநீரால் கோயில் கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்துமலைராமன், ஆஞ்சநேயர், விநாயகர், பைரவர், நவக்கிரகங்களுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனை வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.
திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
