ADDED : ஆக 04, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் உலக நன்மை, மாணவியர் படிப்பு சிறக்க, அனைவரும் அனைத்து நலன்களும் பெற வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் சீனிவாசன் துவக்கி வைத்தனர். மகளிர் மேம்பாட்டுக் குழு பொறுப்பாளர்கள் கவிதா, நந்தினி, தேவி, அமிர்தவர்ஷினி, ஷாலினி ஒருங்கிணைத்தனர். டீன் கவிதா வேலை வாய்ப்பு துறை அலுவலர் ஜெயந்தி, பேராசிரியர்கள் கணேஷ், சிவகுமார், குணசீலன் கலந்து கொண்டனர். பங்கேற்ற மாணவியருக்கு பிரசாதம், வளையல்கள் வழங்கப்பட்டது.