ADDED : நவ 10, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறியிருப்பதாவது:
2025 - - 26 ரவி சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நவ. 15 காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் என்பதால் இத்திட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 540 செலுத்தினால் இயற்கை இடர்பாடு ஏற்பட்டு பாதிக்கும் பட்சத்தில் ரூ. 36,000 வழங்கப்படும். காப்பீடு செய்ய முன்மொழிவு, விண்ணப்ப படிவம், அடங்கல், ஆதார், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன், தேசிய வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையத்தில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

