ADDED : நவ 07, 2024 02:27 AM
மதுரை: மதுரை கோமதிபுரம் சுற்றுச்சூழல் தொண்டு மைய (சென்ஸ்) அலுவலகத்தில் மன அழுத்தத்தை போக்க புதிதாக 'ஹாபி கிளப்' துவக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மன அழுத்தமின்றி முழு ஈடுபாடுடன் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இப்புதிய கிளப்பை சென்ஸ் தலைவர் பதி துவக்கி வைத்தார். ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவன இயக்குனர் இந்திராபதி முன்னிலையில் கிளப் தலைவராக தவக்கிருஷ்ணன், செயலாளராக செல்லசாமி, இணை செயலாளராக தினேஷ், பொருளாளராக கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிரிப்புடன் கூடிய சிந்தனை, உரையாடல்கள், தனித்திறமைகளை வெளிக் கொணர்வது கிளப்பின் நோக்கம். செவ்வாய் தோறும் மாலை 5:00 முதல் 6:30 மணி வரை நிகழ்ச்சிகள் நடக்கும். மனஅழுத்தம் உள்ளோர் பங்கேற்கலாம்.
சுற்றுச் சூழல் ஆர்வலர் சேஷ கோபாலன் தன் தந்தையின் நினைவாக வேம்பு, இலுப்பை, புங்கை, தேக்கு, பிலாசு உள்ளிட்ட 500 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். தேவைப்படும் கல்வி நிறுவனங்கள் 99944 43264 ல் தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீநாக்ஸ் பணியாளர்கள் ஷோபா ராணி, காயத்ரி, அலமேலு, இசக்கி, தாயம்மாள் பங்கேற்றனர்.