ADDED : பிப் 13, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் 120 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் செயல்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் கூரை பணி நேரத்தின்போது உடைந்து விழுந்தது. அதனால் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருமேனி, செயலாளர் சுரேந்தர், பொருளாளர் மேகவர்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
எனவே புதிதாக நீதிமன்றம் கட்டுவதற்கு உடனடியாக நிதி ஒதுக்க கோரி நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக பஸ் ஸ்டாண்டுக்கு சென்று ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். இன்று (பிப். 13) தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், பிப். 16ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தனர்.

