ADDED : ஆக 28, 2026 10:44 PM
திருமங்கலம், ஆக.29–-
திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உள்ளிட்ட 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் போதிய இடவசதி இன்றி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நீதிமன்றங்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்காக இடம் பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் போதிய இடத்தை வருவாய்த்துறை இதுவரை உறுதி செய்து தரவில்லை. இந்நிலையில் தற்போது நீதிமன்றங்கள் உள்ள இடமே போதுமானதாக இருப்பதாகவும் அதே இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து சென்றனர். ஆனாலும் நீதிமன்றம் அமைப்பதில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருமங்கலம் வக்கீல் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
