தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தலைமைப்பண்பு பயிற்சி

 தலைமைப்பண்பு பயிற்சி

 தலைமைப்பண்பு பயிற்சி


ADDED : நவ 29, 2025 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மேலுார் கல்வி மாவட்டம் இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கு தலைமைப் பண்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.

மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நாயகியார் பள்ளியில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்து செஞ்சிலுவை சங்க கொடியை ஏற்றினார். நடுநிலைப் பள்ளி இணை அமைப்பாளர் சரவணன் வரவேற்றார். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் சர்வதேச செஞ்சிலுவை சங்க செயல்பாடுகள், மதுரையில் நடந்து வரும் ஆதரவற்றோர் மீட்பு, ரத்ததானம் பற்றி விளக்கினார். மாவட்ட குழந்தைகள்நலக்குழு தலைவர் பிரேமலதா, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி ஆகியோர் பேசினர். ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

உயிர்காக்கும் முதலுதவி, 108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் ஏற்பாடுகளை செய்திருந்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், வின்சன்ட் பிரபு, டானியல் தனசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us