ADDED : டிச 16, 2025 08:04 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட் டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் பாக்டீரியா இலை கருகல் நோய் தென்பட துவங்கியுள்ளது.
வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறிய தாவது:
சித்தாலங்குடி, புதுார், தென்கரை, மன்னாடிமங்கலம் பகுதிகளில் நோய் அறிகுறிகள் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நோயினை கட்டுப் படுத்த வயலில் அதிக தழைச்சத்து அளிப்பதை தவிர்க்கவும். கதிர் பருவங்களில் தழைச்சத்து உரம் அளிப்பதை தள்ளி போட வேண்டும். மேலும் வயல்களில் பூக்கும் பருவத்தினை தவிர மற்ற நேரங்களில் நீரை வடிக்கவும், நோய் பாதித்த வயலில் இருந்து நீர் மற்ற வயல் களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட வயல்களில் 3 சதவீத வேப்ப எண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டையில் சாறு எடுத்து தெளிக்கலாம். பசுமையான மாட்டுச்சாண சாற்றை நுண்ணுயிரி அழுகல் நோயை கட்டுப்படுத்துவதற்காக தெளிக்கலாம். 20 கிராம் மாட்டு சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அதனை படியவிட்டு பின் நன்கு வடிகட்டிய திரவத்தை பயன்படுத்த வேண்டும்.
தாக்குதல் அதிகமாக இருந்தால் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்லின் கலவை 300கிராம், காப்பர் ஆக்சிக்லோரைடு 1.25 கிலோ கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால் 15 நாட் களுக்கு ஒரு முறை இக் கலவையை தெளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

