நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமையில், சிறப்பு சொற்பொழிவு நடந்தது. சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார்.
ஹாங்காங் தமிழ் பண்பாட்டு மைய தலைவி சித்ரா 'ஹாங்காங் தமிழர்கள்' எனும் தலைப்பில் பேசியதாவது: தமிழர்களின் கொரிய, சுமேரிய, சீனத் தொடர்புகள் பற்றி 2019 முதல் ஆய்வு செய்கிறேன். சீனர்களையும், தமிழர்களையும் பாரம்பரிய மருத்துவம், முன்னோர் வழிபாடு, செம்மொழி அங்கீகாரம், வாஸ்து உள்ளிட்டவை இணைக்கின்றன. ஹாங்காங் தமிழர்கள் இலக்கியம், கலை, விளையாட்டுகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.. இங்குள்ள தமிழ்ப் பண்பாட்டு கழகம் 1967 முதல் செயல்படுகிறது என்றார். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.

