நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் செயற்கை நுண்ணறிவும் பொருளாதாரத் தாக்கமும் என்னும் தலைப்பில் பேராசிரியர் கனகசபாபதி நினைவு சொற்பொழிவு நடந்தது. பேராசிரியர் நேரு வரவேற்றார். எஸ்.பி.ஐ., தலைமை பொது மேலாளர் (ஓய்வு) ஆறுமுகபாண்டி தலைமை வகித்தார்.
ஆதித்தனார் கல்லுாரி பொருளாதாரத் துறை பேராசிரியர் பரதன் பேசினார். மதுரை குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ((க்யூ பிரிவு) பொன்னம்பலம், காந்திய சிந்தனைக் கல்லுாரி முதல்வர் சேது ராக்காயி, வழக்கறிஞர் ராஜீவ் ரூபஸ், கல்வி அலுவலர் நடராஜன் கலந்து கொண்டனர். செயலாளர் நந்தா ராவ், பேராசிரியர் ஆண்டியப்பன் ஒருங்கிணைத்தனர்.

