நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு மனித உரிமை நாள் சட்ட விழிப்புணர்வு முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
ஏ.பி.டி.ஓ., சதீஷ்குமார் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனிச்செல்வி, கலையரசி, பூர்ணிமா முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் கண்ணன், விஜயகுமார், தயாநிதி, சீனிவாசன், சாந்தி, பழனிகுமார் சட்டங்களை விளக்கினர். தன்னார்வலர் பொன்னையா நன்றி கூறினார்.