ADDED : செப் 11, 2025 05:08 AM

செவகாளி
ஆசிரியர்: வெற்றிச்செல்வன் ராஜேந்திரன்
வெளியீடு: அலர் பதிப்பகம்
அலைபேசி: 65 90544115
பக்கம்: 139
விலை: ரூ.140
தென் தமிழகத்தின் வறண்ட நிலப் பகுதிகளிலிருந்து தங்கள் ஆடுகளோடு அலைகுடிகளாகச் சென்று காவிரி ஆற்றின் பாசனப் பகுதிகளில் கிடை அமர்த்தி வாழும் மேய்ச்சல் இன மக்களின் வாழ்வைச் சொல்லும் கதைகளின் தொகுப்பு செவகாளி. கிடையிலிருந்து எழும் ஆட்டுப் புழுக்கையின் மணமும் ஆட்டுக் குட்டிகளின் சத்தமுமாய்க் கீதாரிகளுடன் வாழும் கலை அனுபவத்திற்குள் இட்டுச் செல்கிறது.
கீதாரிகளின் வாழ்வை தன் கவிதைகள், நாவல் மற்றும் கட்டுரைகளில் தொடர்ந்து பதிவு செய்துவரும் ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. நவீன அரசியல், பொருளாதாரச் சூழலில் கீதாரிகள் இனக்குழு எதிர்கொள்ளும் சிக்கல்களை தன் இனக்குழுவிற்கே உரிய பண்பாடு, கலாசார அடையாளங்களோடு இணைத்து எழுதும் உத்தி இதில் கூர்மையடைந்திருக்கிறது. -பாரதி.