ADDED : மார் 30, 2026 07:56 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த இயற்கை வாழ்வியல் முகாமில் செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். இயற்கை மருத்துவர் நிரஞ்சனா பேசுகையில் ''பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னை வராமல் இருக்க இரும்புச்சத்து நிறைந்த பழங்கள், கருப்பு உலர் திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடம்பில் ரத்தஓட்டம் சீராக இருக்க யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்'' என்றார். ஆரோக்கிய பள்ளியின் இயக்குநர் ரஞ்சித்குமார் பேசுகையில் ''வேகவைத்த உணவை குறைத்து எளிமையான, இயற்கையான உணவுகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் சாத்தியமாகும்'' என்றார். காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
