ADDED : ஏப் 03, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
மதுரை: திருப்பரங்குன்றம் சிவன்காளை. கூலித் தொழிலாளி. இவரை 2016 ல் மது அருந்திய தகராறில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக திருப்பரங்குன்றம் வேலு 30, மீது திருநகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மதுரை 6வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உதயவேலவன் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார். நீதிபதி, வேலுவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார்.
