ADDED : ஜூலை 23, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டி கருப்புசாமி கோயில் மந்தையில் 'ஹைமாஸ்' விளக்கு 6 மாதங்களாக எரியாமல் இருந்தது. இதனால் மந்தை பகுதியை மது அருந்தும் பாராக மாற்றினர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., வெங்கடசேனிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின் விளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டு மந்தை பகுதியில் இருள் விலகியது.