ADDED : மே 19, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் இலக்கியப்பேரவையின் 331-வது கூட்டம் கவிதைத் திருவிழாவாக தனியார் பள்ளியில் நடந்தது.
இலக்கியப் பேரவை தலைவர் பூலோகசுந்தரவிஜயன் தலைமை வகித்தார். பேரவையின் புரவலர் கமலம், அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி முன்னிலை வகித்தனர்.
பேரவை செயலாளர் சங்கரன் வரவேற்றார். துணை செயலாளர் ஜெயபால கிருஷ்ணன், பொருளாளர் தமிழ்ச்செல்வன், செயற்குழு உறுப்பினர் பால்பாண்டியன், முனைவர் சூரியகுமார் பேசினர். புலவர் சங்கரலிங்கம் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற தலைப்பில் பேசினார். செயற்குழு உறுப்பினர் பழனி ராஜ் நன்றி கூறினார்.