/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி
/
கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 20, 2025 05:29 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் வயல்வெளிகளில் ஏராளமான புற்கள் முளைத்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் ஆடு, மாடுகள் வளர்க்கின்றனர். வயல்களில் நெல், காய்கறிகள், பருத்தி பயிரிடுகின்றனர். இவற்றுடன் கால்நடைகள் மூலமும் வருமானம் ஈட்டுகின்றனர்.
சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்களில் பல்வேறு செடிகள், புல் வளர்ந்துள்ளது. தற்போது வளர்ந்துள்ள இந்த புற்கள் சில மாதங்களுக்கு கால்நடைகளுக்கு போதுமானதாக இருக்கும். அதுவரை விலை கொடுத்து தீவனங்கள் வாங்க வேண்டியதில்லை என கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.