/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லோடு ரூ.10 ஆயிரம்; வாடகை 22 ஆயிரம்: அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவழிக்கிறாங்க... '
/
லோடு ரூ.10 ஆயிரம்; வாடகை 22 ஆயிரம்: அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவழிக்கிறாங்க... '
லோடு ரூ.10 ஆயிரம்; வாடகை 22 ஆயிரம்: அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவழிக்கிறாங்க... '
லோடு ரூ.10 ஆயிரம்; வாடகை 22 ஆயிரம்: அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவழிக்கிறாங்க... '
ADDED : பிப் 16, 2024 05:38 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் முறையான திட்டமிடல் இல்லாததால் தண்ணீருக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர்.
அரசு பழைய மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாத நிலையில் தினமும் 7000 புற நோயாளிகள், 3500 உள் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை வளாகம் என தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. இந்த வளாகத்திற்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் தீவிர விபத்து பிரிவு வளாகத்திற்கும் சேர்த்து மாநகராட்சி மூலம் தினமும் 60 லோடு தண்ணீர் பெறப்பட்டது.
ஒரு லோடு தண்ணீர் ரூ. 500, லாரி வாடகை ரூ.1100 என ஒரு முறை தண்ணீர் பெறுவதற்கு ரூ.1600 வீதம் தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழித்தனர். திருப்புவனம் அருகே மணலுாரில் இருந்து வைகை ஆற்றின் உறை கிணறு வழியாக தண்ணீர் பெறப்பட்டு மதுரை தெப்பக்குளம் மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் தண்ணீரை கூடுதலாக தேக்கும் வசதி உள்ளதால் அங்கிருந்து வைகை ஆற்றின் கரை, மதிச்சியம் வழியே பைப் லைன் பழைய அரசு மருத்துவமனைக்குள் இணைக்க மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இத்திட்டத்திற்காக தெப்பக்குளத்தில் இருந்து மருத்துவமனை வரை குழாய் பதிக்க மருத்துவமனை நிர்வாகம் நிர்வாகம் ரூ. ஒரு கோடி செலவு செய்து பழைய மருத்துவமனை வளாகத்திற்கு மட்டும் தண்ணீர் பெறப்படுகிறது. பல்நோக்கு வளாகத்திற்கும் தீவிர விபத்து பிரிவிற்கும் தற்போது வரை 20 முதல் 30 லோடு லாரி தண்ணீர் தினமும் பெறப்படுகிறது. லோடு தண்ணீருக்கு ரூ.500 வீதம் 20 லோடுக்கு ரூ.10 ஆயிரம் தான்; வாடகையாக ரூ.22 ஆயிரம் தருவது என்பது சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம் போலுள்ளது.
ஏற்கனவே பழைய மருத்துவமனை வரை பைப்லைன் இணைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வளாகத்திற்கும் இணைப்பை நீட்டித்தால் போதும். தற்போது மருத்துவக் கல்லுாரி அருகே கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலப் பிரிவுக்கும் சேர்த்து பைப் லைனை இணைக்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.