UPDATED : ஜூலை 14, 2026 11:34 PM
ADDED : ஜூலை 14, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெரியார் நகர் முத்தையா மகன்கள் லோடுமேன் அய்யனார் 31, வேன் டிரைவர் சித்திரை 26. அதேபகுதியை சேர்ந்த உறவினர்கள் பிச்சை மகன் பிரபு 35, பழனிச்சாமி மகன் யோகவளவன் 26, பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் பிரபுவிடம் வேன் டிரைவராக சித்திரை வேலை செய்தார்.
சித்திரை ஓட்டிச்சென்ற வேன் விபத்துக்குள்ளானது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று இரவு வீட்டின் அருகே இவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறின் போது யோகவளவன் கத்தியால் குத்தியதில் அய்யனார் இறந்தார். தடுக்க முயன்ற முத்தையா, சித்திரை ஆகியோர் காயமடைந்தனர். தலைமறைவான யோகவளவன், பிரபு உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
