/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டது; அ.தி.மு.க., மருத்துவரணி நிர்வாகி சரவணன் குற்றச்சாட்டு
/
உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டது; அ.தி.மு.க., மருத்துவரணி நிர்வாகி சரவணன் குற்றச்சாட்டு
உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டது; அ.தி.மு.க., மருத்துவரணி நிர்வாகி சரவணன் குற்றச்சாட்டு
உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டது; அ.தி.மு.க., மருத்துவரணி நிர்வாகி சரவணன் குற்றச்சாட்டு
ADDED : நவ 02, 2025 04:02 AM
மதுரை : ''அ.தி.மு.க., ஆட்சியில் நுாற்றுக்கணக்கான விருதுகளை பெற்ற உள்ளாட்சி துறை தி.மு.க., ஆட்சியில் ஊழல் துறையாக மாறிவிட்டது'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
அமைச்சர் நேருவின் உள்ளாட்சித் துறையில், 'ரூ.5000 கோடியில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை செய்துள்ளோம். இதனால் ஒரு சொட்டு நீர் கூட தேங்காது' என்று சொன்னார்கள்.
ஆனால் ஒரு மழைக்கே சென்னை தத்தளிக்கிறது. இதில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதே போல மதுரை மாநகராட்சியில் ரூ.250 கோடி அளவில் வரி முறைகேடு நடந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் நுாற்றுக்கணக்கான விருதுகளை பெற்ற உள்ளாட்சி துறை தி.மு.க., ஆட்சியில் ஊழல் துறையாக மாறிவிட்டது.
தற்போது உள்ளாட்சித் துறையில் 2538 பணியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ராக்கெட் வேகத்தில் ஊழல் நடந்துள்ளது. இன்றைக்கு 1.30 கோடி பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பணத்துக்கு தான் வேலை. படிப்புக்கு வேலையில்லை என தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது. அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது ரூ.30 கோடி வங்கிகடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றி ஆய்வுசெய்த போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்ய பணிக்கு ஏற்ப ரூ.25 லட்சம், ரூ.35 லட்சம் வசூல் செய்து ஏறத்தாழ ரூ.800 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
மாநகராட்சி, நகராட்சிகளில் 2569 பணியிடங்கள் காலியாக இருந்தன. 1.12 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஆனால் தேர்வு முடிவுக்கு வரும் முன்பே பணம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல் கசியவிடப்பட்டன
இதில் திரை மறைவாக இருக்கும் யார் அந்த சார். இன்றைக்கு சாமானிய இளைஞர்கள் இரவு எல்லாம் கண் விழித்து படித்து பெறப்பட்ட மதிப்பெண்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்ன வென்றால் முதலமைச்சரே 2 மாதங்கள் முன்பு பணி நியமன ஆணையை வழங்கி இந்த அரசு ஊழல் கறை படிந்த அரசு என நிரூபித்து விட்டார்.
அமைச்சர் நேரு உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரித்தால்தான் உண்மையான தகவல் கிடைக்கும்.
இவ்வாறு கூறினார்.

