UPDATED : ஏப் 28, 2026 07:39 PM
ADDED : ஏப் 28, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் லோக் அதாலத் நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ராஜசேகரன் தலைமை வகித்தார். விசாரணைக்கு 68 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள், கடன் பெற்றவர்கள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
முடிவில் 8 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கடன் பெற்றவர்கள் வங்கிகளுக்கு ரூ.1.58 கோடி செலுத்த ஒப்புக்கொண்டனர் என பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
