/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐ.ஓ.சி.,க்கு எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
/
ஐ.ஓ.சி.,க்கு எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ஐ.ஓ.சி.,க்கு எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ஐ.ஓ.சி.,க்கு எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : டிச 08, 2025 06:09 AM

திருமங்கலம்: திருமங்கலம் கப்பலுார் சிட்கோ தொழில்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எத்தனால் ஏற்றி வந்தபோது கவிழ்ந்த லாரியை எட்டு மணி நேரம் போராடி மீட்டனர்.
திருமங்கலம் கப்பலுார் சிட்கோவில் ஐ.ஓ.சி.,க்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. சென்னை மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பைப் லைன் மூலம் இங்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தென் மாவட்டம் முழுவதும் லாரி மூலம் வினியோகிக்கப்படுகிறது. தற்போது மத்திய அரசின் எத்தனால் கலப்பு திட்டத்தால், லாரிகளில் எத்தனால் கொண்டு வரப்பட்டு பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது. நேற்று நாமக்கல்லில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் எத்தனாலை ஏற்றிய ஒரு லாரி கப்பலுார் வந்தது. சேமிப்பு கிடங்கின் வாயில் அருகே சென்ற போது அருகில் இருந்த கால்வாய்க்குள் லாரியின் சக்கரம் இறங்கியது. லாரி ஐ.ஓ.சி., வளாக சுற்றுச்சுவர் மீது முழுவதுமாக சாய்ந்தது. உடனே லாரி அருகே யாரும் செல்லாமலும், லாரியிலிருந்து கசிவு ஏற்படுகிறதா என கண்காணித்தவாறு ஐ.ஓ.சி., அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.
தினசரி நுாற்றுக்கணக்கான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் , காஸ் சிலிண்டர் ஏற்றிச்செல்லும் லாரிகளை அங்குள்ள ஐ.ஓ.சி., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் கையாள்கின்றன. இருந்தும் மீட்பு பணிக்கு கிரேன், பயிற்சி பெற்ற படையினர் இல்லாததால் மீட்பதில் தொய்வு ஏற்பட்டது.
எனவே திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று கிரேன்கள் வரவழைக்கப்பட்டு 8 மணி நேர போராட்டத்திற்கு பின்பு லாரி நிமிர்த்தப்பட்டது. எத்தனாலின் தீப்பற்றும் திறன் குறைவு என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் சேமிப்பு கிடங்குகளுக்கும் பரவி பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும்.
ஐ.ஓ.சி., அதிகாரிகள் ரோடுகளை உடனே சீரமைக்கவும், அவசர மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

