தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செக்போஸ்டில் மோதிய லாரி

 செக்போஸ்டில் மோதிய லாரி

 செக்போஸ்டில் மோதிய லாரி


ADDED : மார் 25, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: மதுரை மாவட்ட எல்லையான கள்ளிக்குடி ஆவல்சூரன்பட்டியில் போலீஸ் செக் போஸ்ட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு விருதுநகர் டிரைவர் பாண்டி 32, லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரை சென்றார்.

செக்போஸ்ட் அருகே நிலை தடுமாறிய லாரி, ரோடு தடுப்பில் மோதியதில், முன் பகுதி சேதம் அடைந்தது.

டிரைவர் பாண்டி இடிபாடுகளுக்கு இடையே சிக்கினார். விருதுநகர் - மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள், போலீசார் இடிபாடுகளில் சிக்கிய டிரைவரை மீட்டனர். லாரி அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டபின், போக்குவரத்து சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us