ADDED : ஏப் 11, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை மீனாம்பாள்புரம் நல்ல தம்பி 44, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் ஆட்டுச்சந்தைகளில் விற்பது வழக்கம்.
இதற்காக சொந்தமாக லாரி வைத்திருந்தார். ஏப்.,5ல் திருமங்கலம் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகளை ஏற்றி வந்த அவர் ஆடுகளை இறக்கிய பின் கரடிக்கல் அருகே உள்ள உறவினரின் பெட்ரோல் பங்க் பின்புறம் லாரியை நிறுத்தியிருந்தார்.
நேற்று லாரியை எடுக்க டிரைவர் மாரியப்பன் அங்கு சென்றார். அப்போது லாரி மாயமாகியிருந்தது. நல்லதம்பி புகாரில் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

