ADDED : மார் 20, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை உசிலம்பட்டி ரோட்டில் மானூத்து பெத்தனசாமி கோயில் செல்லும் பிரிவு பகுதியில் அலெக்ஸ்பாண்டியன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக டூவீலரில் வந்த முத்துபாண்டிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் 45, என்பவரை சோதனையிட்டதில் அவரிடம் 50க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 2 ஆயிரம் பணமும் இருந்தது. அவரை பிடித்து எழுமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
