தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எடை தாங்காமல் தரை தட்டும் தாழ்தள பஸ்கள்

 எடை தாங்காமல் தரை தட்டும் தாழ்தள பஸ்கள்

 எடை தாங்காமல் தரை தட்டும் தாழ்தள பஸ்கள்


ADDED : மே 24, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அரசு சொகுசு தாழ்தள பஸ்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு பாதியில் இறக்கி விடப்படுவதாக பயணிகளும், 'அதிக பயணிகள் பயணிக்கும்போது, பஸ்சை இயக்க சிரமாக உள்ளது' என அரசு பஸ் டிரைவர்களும் மாறி மாறி புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் எளிதில் பயணிக்கும் வகையில் கணிசமான அளவில் சொகுசு தாழ்தள பஸ்களை வாங்கும் பணிகளை சில ஆண்டுகளாக போக்குவரத்துறை மேற்கொண்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அசோக் லேலண்டு தொழிற்சாலையில் இந்த வகை பஸ்கள் தயாரித்து அனுப்பப்படுகின்றன. இதில் பஸ்களின் இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ வரை குறைக்க முடியும்; ஒவ்வொரு தாழ்தள பஸ்களிலும் 35 இருக்கைகளுடன் 75 பயணிகள் மொத்தமாக பயணிக்க முடியும் எனவும், பி.எஸ்.6 பொருத்தப்பட்டுள்ளதால் மேடு, பள்ளங்களில் கூட எவ்வித அதிர்வுகளும் பயணிகளுக்கு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது.

மார்ச் 4 ல் விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கடலுாருக்கு அரசு தாழ்தள பஸ் சென்றபோது, டிரைவரால் 2வது கியருக்கு பிறகு வேறு கியரை மாற்ற முடியவில்லை. இதனால் பயணிகள் பாதியிலேயே இறக்கி விடப்பட்டு, மாற்று பஸ் வரும் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதே போல் சில நாட்களுக்கு முன்பு மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு தாழ்தள பஸ் தோப்பூர் அருகே சென்றபோது, 'ஆக்ஸில் ராட்' அறுந்ததால் பஸ்சின் அடிப்பகுதி ரோட்டில் உரசியதால் தீப்பொறி எழுந்தது. இதனால் பதறிப்போன பயணிகள் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து அரசு தாழ்தள பஸ்களில் இதுபோன்ற பிரச்னைகள் வருவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. திருவிழா, பண்டிகை, வார இறுதி நாட்களில் அதிக பயணிகள் ஏற்றும்போது எப்போது 'பிரக்டவுன்'ஆகுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில் 'தாழ்தள பஸ்சில் 80 பேருக்கு மேல் பயணிகள் ஏறும்போது பஸ்சை இயக்குவது மிகவும் சிரமம். சில நேரங்களில் பழுதடைந்து பாதியில் நிற்கும் சூழல் உள்ளது. மழை நேரங்களில் வேகத்தடையில் பஸ்சை ஏற்றுவது சவாலாக இருக்கிறது' என்றனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: எந்தவொரு புதிய பஸ்களும் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே நன்கு பராமரிக்கப்படுகின்றன. அரசு பஸ்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் இரண்டாம் தர உபகரணங்களை வைத்தே மாற்றித்தரப்படுகின்றன.

ஒரு பணிமனைக்கு குறைந்தது ஐந்து தாழ்தள பஸ்கள் பராமரிப்பு மையங்களில் நிறுத்தப்படும் சூழல் உள்ளது. அரசு பஸ் பராமரிப்பு தொழில்நுட்ப பிரிவில் 490 காலியிடங்கள் உள்ளன. ஆனால் இப்பிரிவில் ஆட்களை நியமித்து 26 ஆண்டுகளுக்கு மேலாகிறது. த வெ.க. அரசாவது போக்குவரத்து கழகத்தில் தேவையான சீர்த்திருத்தங்களை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''அசோக் லேலண்டு நிறுவனத்திடம் பேசியுள்ளோம். அந்நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, சர்வீஸ் இன்ஜினியர்கள் மூலம் பிரச்னையை தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர்,'' என்றார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us