ADDED : ஏப் 26, 2026 05:18 PM
பேரையூர்: பேரையூர் வட்டார பகுதிகளில் இரண்டு மாதங்களாக குறைந்தழுத்த மின்சாரமே வருவதால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
வீடுகளுக்கு 240 வோல்ட் வர வேண்டிய நிலையில் பல பகுதிகளில் 160 முதல் 150 வோல்ட் வரை மட்டுமே கிடைக்கிறது. மின்வினியோகத்தில் அடிக்கடி ஏற்ற, இறக்கமாக இருப்பதால் வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. சில மின்சாதனங்கள் செயல்படுவதில்லை.
போர்வெல் மோட்டார் இயங்காததால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். கோடைகாலம் என்பதால் அனைத்து வீடுகளிலும் மின்விசிறிகளை இரவு பகலாக பயன்படுத்துகின்றனர். குறைந்த மின் அழுத்தத்தால் மின்விசிறி மெதுவாக சுற்றுவதால் இரவில் பலர் துாக்கத்தை தொலைக்கின்றனர்.
விவசாய நிலங்களில் தண்ணீர் பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மின்வினியோகத்தை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
