ADDED : டிச 28, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மக்கா குப்பையை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி வருகின்றனர்.
மக்கா குப்பை நிலத்தை பாதிக்காத வண்ணம் சுகாதார மேம்பாட்டை மேற்கொள்ளும் வகையில் மதுரை சுற்றுச்சூழல் அமைப்பினர், கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்பு, பார்க்டவுன் முத்தமிழ் நகர் குடியிருப்பு, டவுன்ஹால், கே.கே.நகர் பகுதிகளில் மக்கா குப்பையை சேகரித்தனர்.
அவற்றை சமூக ஆர்வலர் மகாமாயன் தரம் பிரித்து, 650 கிலோ குப்பையை விருதுநகர் ஆர்.ஜே.குப்பை வங்கிக்கு மறுசுழற்சிக்காக அனுப்பினார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ராகவன், ஸ்ரீவித்யா, சரஸ்வதி, பத்ரி நாராயணன், அனுராதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இப்பணியில் இணைய விரும்புவோர் 98941 18113ல் தொடர்பு கொள்ளலாம்.

