/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமுக்கத்தில் ஜன.5 முதல் 7 வரை மடீட்சியாவின் கல்யாண கண்காட்சி
/
தமுக்கத்தில் ஜன.5 முதல் 7 வரை மடீட்சியாவின் கல்யாண கண்காட்சி
தமுக்கத்தில் ஜன.5 முதல் 7 வரை மடீட்சியாவின் கல்யாண கண்காட்சி
தமுக்கத்தில் ஜன.5 முதல் 7 வரை மடீட்சியாவின் கல்யாண கண்காட்சி
ADDED : ஜன 03, 2024 06:24 AM
மதுரை: மதுரை மடீட்சியா சார்பில் 2வது ஆண்டு கல்யாண கண்காட்சி தமுக்கம் மைதானத்தில் ஜன., 5 முதல் 7 வரை தினமும் காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.
தலைவர் லட்சுமிநாராயணன், துணைத்தலைவர் சந்திரசேகர், கண்காட்சி தலைவர் பாரதி, ஒருங்கிணைப்பாளர் ராஜா கூறியதாவது:
திருமணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கண்காட்சியாக மடீட்சியா சார்பில் இடம்பெற செய்கிறோம். மேக்கப், ஆடை அலங்காரம், ஜவுளி, தையல், அன்பளிப்பு பொருட்கள், திருமண மண்டபம், கேட்டரிங் தொடங்கி ஹனிமூன் வரையான திட்டமிடலுக்கு 75 ஸ்டால்களை பார்வையிட்டால் போதும். புதிய இளம் தொழில்முனைவோரை ஈர்க்க குறைந்த கட்டணத்தில் ஸ்டால்கள் அமைத்துள்ளோம்.
கண்காட்சியில் டாக்டர் நயினார் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் அமைத்துள்ளோம். ஜன.,5 மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை சேலை மடிப்பு, சேலை கட்டும் வகைகள் குறித்த பயிலரங்கு, ஜன.,6, 7ல் காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை பேப்ரிக் பெயின்டிங் மற்றும் மணப்பெண் அலங்காரத்திற்கான பயிலரங்கு இலவசமாக நடத்தப்படுகிறது. மதுரை அண்ணாநகர் ஐ நெட் பேஷன் டெக்னாலஜி நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது என்றனர்.